விமர்சனம்

Friday, June 10, 2011

கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன்!-'அவன் இவன்' வில்லன் ஆர்.கே.

'எல்லாம் அவன் செயல்' ,'அழகர்மலை' படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆர் .கே.தற்போது 'புலிவேஷம்','கடமை கண்ணியம் கட்டுப்பாடு 'படங்களில் கதாநாயகனாக நடித்துவரும் அவர்,பாலாவின் 'அவன்-இவன் 'படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.'அவன் இவன் 'படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில்; "வில்லன் கேரக்டர் என்று சொல்வதைவிட அது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று சொல்லலாம்.மாட்டு இறைச்சியை   வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளேன்.விஷால் கூட சண்டைக் காட்சியும் இருக்கிறது.பொதுவா பாலா சார் திருப்தி வரும் வரை எடுப்பார்.ஆனால் நான் நடிச்ச காட்சிகள் எல்லாம் ரெண்டு டேக்கிலேயே ஒ.கே.பண்ணி அவரிடம் பாராட்டு வாங்கியிருக்கேன்.இந்த கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கேன்  ஒரு மாசம் கிட்ட மேக்கப்போட்டு நடிக்காமல் இருந்திருக்கேன் தினமும் ஷூட்டிங் ஸ்பாட் வந்துடுவேன்அந்த கேரக்டரை உள் வாங்குவதற்காக  .ஒருமாசம் என்னை ஷூட்டிங்  ஸ்பாட்டிலேயே அலைய விட்டார் பாலா. படம் பார்த்தவங்க    எல்லாரும் அது ஆர்.கே.யா என்று கேட்டாங்க அந்த அளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார்  பாலா." என்றார்.தொடர்ந்து வில்லனாக வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு "எனக்கு கேரக்டர் முக்கியத்துவமாக தெரிந்தால் தாராளமாக  நடிப்பேன்.வில்லனாக நடித்தால் கண்டிப்பாக கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன்.அதை கொள்கையாகவே வைத்திருக்கேன் "என்றார்.

No comments:

Post a Comment