விமர்சனம்

Tuesday, June 21, 2011

IN THE CITY OF SYLVIA’


ஆறு வருடங்களுக்கு முன்னர் தான் சந்தித்த அழகிய பெண்ணை தேடி ஓர் ஓவியத் திறைமை கொண்ட இளைஞன் இத்தாலியின் சில்வியா நகருக்கு செல்கின்றான். அவனுடைய மூன்று நாள் வாழ்க்கையை  ‘IN THE CITY OF SYLVIA'. என்ற ஸ்பானிய மொழி திரைப்படம்.அழகுணர்ச்சியோடு சொல்கிறது. 2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தினை [84நிமிடங்கள்] திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான Jose Luis Guerin இயக்கியிருக்கிறார்
சில்வியா நகரிலுள்ள உணவு விடுதியொன்றின் வாடிக்கையாளர்களும், பராமரிப்பு பெண்ணும், வீதிகளும், தொடரூந்தும், ஓவியனும், அழகிய சில பெண்களுமே படத்தின் கதாபாத்திரங்கள். 

பெயர், முகவரி தெரியாத, அதுவும் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஓர் கண்காட்சியில் சந்தித்து உரையாடிய பெண்ணைத் தேடி எந்தவொரு தகவலும் இல்லாமல் ஒரு பெரிய நகரத்துக்கு செல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்த விடயத்தில் ஆத்மார்த்தமாக செயற்படுகின்றான் அந்த ஓவிய இளைஞன். அவனின் தேடல் முடிந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு வார்த்தைகளின், வசனங்களின், பேரிரைச்சல்களின் அலட்டல் இன்றி விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தினை தனியையில் எந்தவொரு இடையூறுகளுமின்றி பார்க்கிறபோது வானத்தில் மிதக்கின்ற மாதிரியாக, மனது லேசானதான உணரமுடிந்தது. நிச்சயம் தமிழில் இந்த படத்தை யாராவது சுட்டுவிடுவார்கள். 
                                  
                                      

No comments:

Post a Comment